ரத்த அழுத்த நோய் இருப்பதற்கான ஆரம்ப நிலையில் மருந்து எடுத்துக் கொள்ளாமலேயே கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
அதற்காக சில விஷயங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
அதாவது, உணவில் உப்பைக் குறையத்துக் கொள்ள வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை தொடவேக் கூடாது.
தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி அவசியம். இது குறைந்தபட்சம்தான். எனவே தினமும் நடைப்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள்.
அதிகமான பரபரப்போ, உணர்ச்சிவசப்படுதலையோ தவிர்க்கவும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அங்கிருந்து வெளியேறுங்கள்.
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் அவசியம்.
No comments:
Post a Comment