உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Showing posts with label உடல் நலன். Show all posts
Showing posts with label உடல் நலன். Show all posts

Wednesday, October 23, 2013

சூட்டினால் வயிற்று வலியா..?


ஒருபிடி வெந்தயத்தை நன்றாக கருக வறுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடி செய்யவும். இதை சூடான சாதத்தில் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி பிசைந்து, நான்கு கவளம் சாப்பிட்டால் அரைமணி நேரத்தில் வயிற்று வலி பறந்து போடும்.

சீதப்பேதி குணமாக்க..

சீதப்பேதியை குணமாக்க மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து, மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுக்க சீதப்பேதி குணமாகும்.

சுகர் பிரச்சனையா?..

நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை (கருப்பு) சுண்ணாம்புச்சத்து அதிகாமாக இருக்கிறது. இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனுண்டு.

கீரை தரும் பலன்


  • சிறுகீரை: கண் எரிச்சல், இருமல், பித்தம் போக்கும்
  • பசலைக்கீரை: மலக்கட்டு, உடல் வெப்பம் தணிக்கும்
  • பொன்னாங்கண்ணிக்கீரை: உடல் அழகு கூடும்
  • புளிச்சக்கீரை: ரத்தக்குறைபாடுகள் நீக்கும்
  • புதினாகீரை: ஜீரண சக்தி உண்டாகும்
  • தூவளைக்கீரை: காது கேளாமை சரியாகும்

பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாக...


சுக்கு, சீரகம், தணியாவை தலா 25 கிராம் வறுத்து மிக்ஸியில் பொடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு....

  • பெரிய நெல்லிக்காயைத் துருவி காப்பி பொடி போல் பொடி செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
  • நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது
  • கீழாநெல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்
  • செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக் கூடியது. தகுந்த வயது வந்ததும் பூப்பெய்யாத பெண்கள் இப்பூவை உண்டுவர பூப்பெய்யலாம்.
  • வெள்ளைப் பூண்டை தோல்நீக்கி வேகவைத்துச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் சுரக்கும்
  • கடுக்காய், மருதம்பட்டை, ஆவரம்பூ 200 கிராம் எடுத்து பொடிக்கவும். 5கிராம் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வர ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.
  • மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
  • வாழைப்பூவை ரசம் செய்து அருந்தினால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்

Wednesday, September 26, 2012

The happiest people........

Are you enjoying your Coffee…!!!

A group of alumni, highly established in their careers, got together to visit their old university professor. Conversation soon turned into complaints about stress in work and life. Offering his guests coffee, the professor went to the kitchen and returned with a large pot of coffee and an assortment of cups – porcelain, plastic, glass, crystal, some plain looking, some expensive, some exquisite – asking them to help themselves to the coffee.

When all the students had a cup of coffee in hand, the professor said:

“If you noticed, all the nice looking expensive cups were taken up, leaving behind the plain and cheap ones. While it is normal for you to want only the best for yourselves, that is the source of your problems and stress.
Be assured that the cup itself adds no quality to the coffee. In most cases it is just more expensive and in some cases even hides what we drink. What all of you really wanted was coffee, not the cup, but you consciously went for the best cups… And then you began eyeing each other’s cups”.
Now consider this: Life is the coffee
The jobs, money and position in society are the cups. They are just tools to hold and contain Life, and the type of cup we have does not define, nor change the quality of Life we live. Sometimes, by concentrating only on the cup, we fail to enjoy the coffee God has provided us.”

God brews the coffee, not the cups………. So start enjoying your coffee today!

----------------------------------------------------------------

“The happiest people don’t have the best of everything.
They just make the best of everything.”

Live simply. Love generously.

Care deeply. Speak kindly.

Leave the rest to GOD !

Monday, June 11, 2012

பப்பாளியின் மகிமை

index
*அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி
*கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம்.  ஆக எடை அதிகரிக்காது. (100கிராம் பப்பாளியில் கலோரியின் அளவு 32 தான்)
*பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு ரத்தக்கொதிப்பைக் குறைக்கும்
* வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்கள், ஜீரண சக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியின் “பாப்பைன்” அதிகம் உதவுகிறது.
*உடனே ஜீரணமாக, பப்பாளி சிறந்த உணவு
*உடலில் இறந்துபோன செல்கள் நீங்கவும், புதிய செல்கள் உருவாகவும், தோல்கள் வலவலப்பாக இருக்க பப்பாளி உதவுகிறது
*மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக பப்பாளி ஒரு சிறந்த மருந்து
* வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் சரியாக பப்பாளியில் உள்ள “பெப்சின்” உதவுகிறது
*பப்பாளி தொடர்ந்து உட்கொண்டால் பார்வை திறன் மேம்படும்
*ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சைபழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லிரல் பலம் பெறும்.
images

Friday, April 27, 2012

Cancer Vs Lemon:A small request.. Just one line.

All you are asked to do is keep this circulating, 
even if it's only to one more person.
In memory of anyone you know 

who has been struck down by cancer or
is still living with it.
A Candle Loses Nothing by 

Lighting Another Candle..
Please Keep This Candle Going

The surprising benefits of lemon!
================================
Institute of Health Sciences, 819 N. L.L.C. Charles Street Baltimore , MD 1201.
This is the latest in medicine, effective for cancer!
Read carefully & you be the judge.
Lemon (Citrus) is a miraculous product to kill cancer cells. It is 10,000 times stronger than chemotherapy.
Why do we not know about that? Because there are laboratories interested in making a synthetic version that will bring them huge profits. You can now help a friend in need by letting him/her know that lemon juice is beneficial in preventing the disease. Its taste is pleasant and it does not produce the horrific effects of chemotherapy. How many people will die while this closely guarded secret is kept, so as not to jeopardize the beneficial multimillionaires large corporations? As you know, the lemon tree is known for its varieties of lemons and limes. You can eat the fruit in different ways: you can eat the pulp, juice press, prepare drinks, sorbets, pastries, etc... It is credited with many virtues, but the most interesting is the effect it produces on cysts and tumors. This plant is a proven remedy against cancers of all types. Some say it is very useful in all variants of cancer. It is considered also as an anti microbial spectrum against bacterial infections and fungi, effective against internal parasites and worms, it regulates blood pressure which is too high and an antidepressant, combats stress and nervous disorders.
The source of this information is fascinating: it comes from one of the largest drug manufacturers in the world, says that after more than 20 laboratory tests since 1970, the extracts revealed that: It destroys the malignant cells in 12 cancers, including colon, breast, prostate, lung and pancreas ... The compounds of this tree showed 10,000 times better than the product Adriamycin, a drug normally used chemotherapeutic in the world, slowing the growth of cancer cells. And what is even more astonishing: this type of therapy with lemon extract only destroys malignant cancer cells and it does not affect healthy cells.
 
Institute of Health Sciences, 819 N. L.L.C. Cause Street, Baltimore, MD1201

SIMPLE BUT EFFECTIVE EXERCISE

The essence of the exercise is that your "Eyes Must be Closed" when you are doing this exercise. You must practise the "Jin Ji Du Li" exercise with the eyes closed. This exercise was so simple and amazing.
Here is the exercise:
Stand on one leg while your eyes are closed. That is all. Just try it right now, stop reading and stand up, close your eyes and try standing on one foot. 
 If you are not able to stand for less than 10 seconds, it means that your body has degenerated to 60 to 70 years old level in other words, you may be only 40 years old, but your body has aged a lot faster.


You do not need to lift your leg high, if your internal organs are out of synch, even lifting your leg this bit will make you wobble.
It was very heartening to know that frequent and regular practice can help you recover your sense of balance.
In fact Chinese specialists suggest daily practice of Jin Ji Du Li for 1 minute, this helps prevent dementia.

You can try slightly closing both eyes while practicing Jin Ji Du Li, instead of completely closing them; in fact this is what the health specialist Zhong Li Ba Ren recommends.
Daily practice of Jin Ji Du Li, can help in healing many illnesses or diseases like
  • Hypertension,
  • High Blood Sugar or diabetes,
  • Neck and Spinal diseases,
  • it can also prevent you from getting dementia.

As you gain ability to stand for longer time, the feeling of "head heavy, light feet” disappears. As benefits or practising Jin Ji Du Li, you will experience that the quality of sleep improves, the mind clears up and memory improves significantly. Most importantly if you can practice Jin Ji Du Li with your eyes closed for 1 minute every day, you will not get dementia.
Zhong Li Ba Ren explained that there are 6 important meridians passing through our legs. When you stand on a single leg, the weak meridian will feel sore while getting the necessary exercise, and as this happens, the corresponding organs of these meridians and their path-ways, start getting the necessary tuning. This method can focus or concentrate the awareness, and channel the body's qi to the foot. The beneficial effects of practising Jin Ji Du Li on various illnesses associated with hypertension, diabetes, neck and spinal diseases are quick to be seen and felt. Jin Ji Du Li can also prevent gout.
Jin Ji Du Li helps to Strengthen body Immunity rapidly
Jin Ji Du Li it is suitable for everyone generally. It is the basic cure for "Cold Feet Disease” and it can also strengthen the body’s immunity. You do not have to wait until you have any illness to start practising Jin Ji Du Li.

அரிசி பருப்பு சாதம்

கொங்கு நாட்டு உணவுகளில் மிகவும் பிரபலமானது அரிசி பருப்பு சாதம். இந்த சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அரிசியோடு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு சேர்த்து சாதம் தயார் செய்ய வேண்டும். அதோடு தட்டைப் பயறு, கொண்டக் கடலை ஆகியவற்றைக் தனியாக வேக வைக்க வேண்டும். அதை சோம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளித்து சாதத்தில் சேர்த்து கிளரினால் சுவையான, புரதச்சத்து மிகுந்த அரிசி பருப்புச் சாதம் தயாரிகிவிடும்.
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Tuesday, October 25, 2011

உடனடி தீபாவளி லேகியம்!

தீபாவளி லேகியம் செய்ய இயலவில்லை என்றால், ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்

Thursday, October 6, 2011

சர்க்கரை நோயா? அப்ப இந்த தகவல் உங்களுக்குத்தான்

இந்தியாதான் உலகின் சர்க்கரை நோயில் தலைநகரமாகும். எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் தாக்கும் ஒரு ஒப்பற்ற நோய். சாகும் வரை கூடவே வரும் நன்பன். இதனால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ஆண்மை குறைவு, குணப்  படுத்த முடியாத புண்கள், கால்களில் மதமதப்பு, கண் பாதிப்பு, என சொல்லிக்கொண்டே போகலாம்.  இதற்கு ஆங்கில மருந்து சாப்பிட்டு சலித்தவர்கள் அதிகம். 
நமக்கு சர்க்கரை தேவைதான், ஆனால் அளவு கூடும் போதுதான் பிரச்சனை. அதை நமது கட்டுப்பாட்டில் வைக்க(80-120) ஒரு எளிய மருந்து. அதுதான் "திரிபாலா" நெல்லிக்காய் பொடி 100 கிராம், தான்றிக்காய் பொடி 100 கிராம், கடுக்காய் பொடி 100 கிராம் இவற்றை கலந்தால் கிடைப்பது திரிபாலா. 

இந்த திரிபாலாவை தினமும் காலை(வெறும் வயிற்றில்), மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.  சளித்தொல்லை இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம். சளி சரியான பின்பு சாப்பிடலாம்.

மேலும் விரபங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் செயல்படும் டெய்சி ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட் தலைவர் சரணை சந்தியுங்கள்.

கிரீன் டீ மகிமை தெரியுமா?!

index
சீனர்கள் தந்த மிகப்பெரிய கொடை தேநீர். அதிலும் கிரீன் டீ ஒரு வரப்பிரசாதம்தான். பச்சைத்தேயிலை செடியின் நுனிக் கொழுந்து இலைகளை பறித்து அதன் பசுமைத்தன்மை மாறாமல் பதப்படுத்தி வெந்நீரில் அருந்தும் வண்ணம் தயார் செய்யப்படுவதையே கிரீன் டீ என்கிறோம். சாதாரன டீயை விட கிரீன் டீயில் அதிக நன்மை உள்ளது.
கிரீன் டீயின் மகிமைகள்
*புற்று நோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்கான செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது.

*ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திகிறது

images*ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்

*ரத்த குழாயில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது

*உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது.

*எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்வை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது

*நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை நீக்குகிறது

images1*பல் சொத்தை, வாய் துற்நாற்றத்தை தடுக்கிறது

* ஞாபக சக்தி அதிகரிக்கிறது

*பருக்கள் வராமல் தடுக்கிறது.

*என்றும் இளமையாக வைக்க உதவுகிறது

*சருமத்தை பாதுகாக்கிறது

*வயதான பின்பு வரும் ஞாபக மறதி, நரம்பு தளர்ச்சியை தடுக்கிறது.

இப்ப சொல்லுங்க எந்த டீ குடிக்கப்போறிங்கன்னு.

Sunday, July 24, 2011

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியா?

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியால் அதிக தொல்லைக்கு ஆளாவர் பெண்களே அதிகம். அதற்கு எளிய மருந்து. நெருஞ்சி முள்ளை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பருக வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது.  நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

நல்ல டாக்டர்கள் "இருவர்"

நல்ல வாழ்வு வாழ நாட வேண்டிய இயற்கை டாக்டர்கள் இருவர்
அவர்களில் ஒருவர். இவரிடம் காலையில் எழுந்து உடலை காட்டுவதுதான். நமது உடலை இவர் "செக்கப்" செய்து கொள்ள காசு வாங்க மாட்டார். அவர் "சூரியன்" ஆவார்.
சூரியன் என்ற டாக்டர் தரும் பயன்கள்
* சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார் என்பது பழமொழி
* சூரிய ஒளி சருமத்திற்கு பொழிவு தருகிறது.
* உடலில் நோய் எதிர்ப்பு தரும் வெள்ளை அனுக்களை அதிகரிக்கச் செய்கிறது
* சூரிய ஒளி உணவு செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது. கழிவுகளை வெளியேற்றுவதற்க்கு உதவும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துனை புரிகிறது.
*உடல் ஊட்டச்சத்திற்குத் தேவையான வைட்டமின் "டி" சூரிய ஒளி தருகிறது.
* மாலை வெயிலில் நடைப்யணம் மேற்கொண்டால் ஆண்மை விருத்தி ஏற்படும்
* காலை, மாலை சூரிய ஒளி நமது உடலில் பட்டால், புற ஊதாக்கதிர்கள் படும். அது வைரஸ்,பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் உச்சி வெயில்  வேண்டாம்.
*சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது

அடுத்த டாக்டர்: இவர் கசப்பில்லாத மருந்து தருவார். எனவே அனைவரும் இவரை விரும்புவர். மற்ற மருந்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று டோஸ் என்றால், இவர் தரும் மருந்து ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டோஸ். அவர்தான் "தண்ணீர்".
*சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ரோலைட் என்னும்  மூலக்கூறு உடல் இயக்கத்திற்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உடலுக்குத்தேவையான எலக்ரோலைட்டை உடல் பெற ஏதுவாக இருக்கும். இல்லாவிட்டால் உடலில் உள்ள செல்கள் வறண்டு விடும் அல்லது இறந்து விடும்.
* உடலில் கெட்ட கொழுப்பு ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது,
*வாத நோய் வருவதை தண்ணீர் தடுக்கிறது,
*இதயம், மூளைக்கு செல்லும் தமனிகள் தடையின்றி செல்ல உதவுகிறது
*நமது மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதால் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது

அப்ப இந்த இரண்டு டாக்டர்களையும் தினமும் பாருங்க, அவர்கள் உங்க ஆரோக்கியத்தின் நண்பர்கள் ஆவர்.

Saturday, July 9, 2011

வயிற்றுவலி உடனே தீர

நமக்கு வயிற்று வலி வந்தால் என்ன செய்வது என்று தோன்றாது. அதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமடையும்.

Wednesday, June 8, 2011

கொலஸ்ட்ரால் ஓர் விளக்கம்

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
  • Total Cholesterol <—>200 mgm%  மொத்த கொலஸ்ட்டிரால்
  • LDL Cholesterol <—>100 mgm%  குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • VLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
  • HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

  • எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
  • ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
  • கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
  • பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
  • ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
  • அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
  • ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
  • மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  • ஒமேகா 6 உள்ள உணவுகள்
  • சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்

  • · சீரான உடற்பயிற்சி
  • · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • · மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • · அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • · யோகாசன பயிற்சி செய்வது,
  • · தியானப் பயிற்சி செய்வது .
^ Scroll to Top