இந்த பக்கத்தில் நாம் நம் நலனை பாதுக்காக்கத் தேவையான அவசிய மூலிகைகள் பற்றிய அற்புதத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படியுங்கள், பயன் பெறுங்கள்.
1.விபூதிப் பத்திரி மூலிகையை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டு கொஞ்சம் வாயின் தாடையில் ஒதுக்கிக் கொண்டு எவ்வளவு தூரம் ஓடினாலும் களைப்பு என்பதே தெரியாது.
2. குமரிக் கற்பகம்: சோற்றுக் கற்றாழைக்கு மறுபெயர் குமரிக் கற்பகம். இந்தச் சோற்றுக் கற்றாழையில் உள்ள சோற்றை எடுத்து மண் சட்டியில் உரசி கழுவி எடுத்து அதிகாலை ஒரு துண்டு விழுங்குவதுடன் நாற்பத்தெட்டு நாள் இரவுகளில் அந்தக் கற்றாழை மடலை உள்ளங்காலில் கட்டி வந்தால் பகலில் நட்சத்திரம் காணும் அளவிற்கு கண் கூர்மை பெறும்.
3. விளாபழம்: இந்த பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். வாயு நீங்கும், இருமல், இரைப்பு, சுவையின்மை, நீர் வேட்கை, கண்டவாறு பிதற்றுவதை இந்த மரப்பட்டை நீக்கும். உடல் வலிமை கூடும். இந்த மரத்தின் பிசினை எடுத்து தூளாக்கி உண்டால் வெள்ளை படுதல், நீரிழிவு நீங்கும். வாய்புண் ஆறும்.
4. சோளம்: இதனை உண்டால் ஆண்மை உண்டாகும். இதனை இடித்து மாவாக்கி கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். மாவைக் களியாகச் சாப்பிடலாம். இது நீரடைப்பு, நீர்ச்சுருக்கு முதலிய நோய்களைப் போக்கும். இருமல், கோழைக்கட்டு, கக்குவான் போன்ற நோய்கள் குணமாகும்.
5. நெருஞ்சி முள்: யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியால் அதிக தொல்லைக்கு ஆளாவர் பெண்களே அதிகம். அதற்கு எளிய மருந்து. நெருஞ்சி முள்ளை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பருக வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
6. நாட்டு நெல்லிகாய்: ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.
இன்னும் வரும்....
No comments:
Post a Comment