உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Showing posts with label கிச்சன் டிப்ஸ். Show all posts
Showing posts with label கிச்சன் டிப்ஸ். Show all posts

Sunday, October 21, 2012

காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போறீங்களா? இதப்படிச்சிட்டு போங்க

 

  • முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்
  • வெண்டக்காய் மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்
  • கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில் கூட செல்லாதீர்கள்
  • அரைக்கீரை, முளைக்கீரையில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது 
  • வெண்மையாகவும் அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாஙகலாம். பூத்து விரிந்திருந்தால் சுவை கிடையாது
  • நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவைகளை கையால் அழுத்தும்போது அழுந்தினால் நல்லது.
  •  
  •  ஆனால் வெங்காயம், வாழைக்காய்,மாங்காய் அழுந்தினால் வேண்டாம்
  • அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சுவையோ சூப்பர்
  •  
  • பாதி பழுத்த தக்காளிதான் சுவையாக இருக்கும்
  • வாழைத்தண்டை கிள்ளிப்பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்

Friday, April 27, 2012

கொள்ளு மசியல்

உங்க கொழுப்பு டாக்டரிடம் போகாமல், உடற்பயிற்சி இல்லாமல் குறையனுமா? அப்ப இந்த கொள்ளு மசியல் செய்து வாரம் இரண்டு தடவை உணவோடு சேர்த்து கொள்ளுங்கள். 

கொள்ளு பயறு தேவையான அளவு எடுத்து உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். அதை கடுகு, உளுத்த்தம் பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்தால் கொள்ளு மசியல் தயார். சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு கொள்ளு மசியல் சிறந்த சைடிஸ். சாதத்தில் சேர்த்தும் வடகம் தொட்டுகொண்டு சாப்பிடலாம். ஒரு முன்று மாதம் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்க உங்க உடம்பில் உள்ள கொழுப்பு கானாமல் போய் உடல் சிக் என இருக்கும்.

அரிசி பருப்பு சாதம்

கொங்கு நாட்டு உணவுகளில் மிகவும் பிரபலமானது அரிசி பருப்பு சாதம். இந்த சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அரிசியோடு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு சேர்த்து சாதம் தயார் செய்ய வேண்டும். அதோடு தட்டைப் பயறு, கொண்டக் கடலை ஆகியவற்றைக் தனியாக வேக வைக்க வேண்டும். அதை சோம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளித்து சாதத்தில் சேர்த்து கிளரினால் சுவையான, புரதச்சத்து மிகுந்த அரிசி பருப்புச் சாதம் தயாரிகிவிடும்.
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Friday, April 6, 2012

வாழை இலையின் பயன் தெரியனுமா?

வாழை இலையின் பயன் தெரியனுமா? அப்ப இங்கே சொடுக்கவும். படித்துவிட்டு திரும்பி வந்துடனும் சரியா?Vallai Thottam

Tuesday, March 8, 2011

பாமாயில் பயன்படுத்துபவர் கவணத்திற்க்கு

பாமாயில் அதிக கொழுப்புச்சத்து கொண்ட எண்ணெய்யாகும். ஆக பாமாயில் பயன்படுத்துபவர்கள் அதன் கொழுப்புச்சத்தை எடுத்தபின்பு பயன்படுத்தினால் நல்லதுதானே? கொழுப்புச்சத்தை எடுக்க, பாமாயிலை ஓருபாத்திரத்தில் இட்டு கொதிக்கவிட்டு அதில் புளி ஒரு நொல்லிக்காய் அளவு போட்டு நன்கு கொத்திக்க விடவும். பின்பு ஆறவிட்டு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தினால் அதன் கொழுப்புச்சத்து நீக்கப்பட்டதாக இருக்கும்.  இது எப்படி இருக்கு!

Tuesday, January 18, 2011

எந்த எண்ணெய் அதிக கொழுப்பு உள்ளது?

நாம் சமயலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது என்பதை எப்படி அறிவது. மிகச் சுலபம். அதாவது குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்ட எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய் உறையும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலில் அதிக கொழுப்பு சேர்த்து, இரத்த குழாய்களின் வழி அடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் குளிர்காலத்தில் உறையும் தன்மையில்லாத எண்ணெய்களான நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவைகளில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால், உடலில் கொழுப்புச்சத்து சேராது. ஆரோக்கியமானது ஆகும்.  இப்ப சொல்லுங்க, உங்க வீட்டுல உறையும் எண்ணெய்யா? உறையாத எண்ணெய்யா?

Tuesday, November 9, 2010

புதினா சர்பத்

ஒரு கட்டு புதினாவை 50 கிராம் இஞ்சியுடன் நைசாக அரைத்து வடிகட்டி, அரைக்கிலோ சர்க்கரைப் பாகு கொதிக்கும் போது இந்த வடிகட்டிய புதினா நீரையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு ஆறிய பின் 2 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, பாட்டிலில் ஊற்றி வைக்கவும். வேண்டும் போது, ஒரு பங்கு புதினா சர்பத்துக்கு 2 பங்கு ஐஸ் வாட்டர் சேர்த்துத் பருகுங்கள்.

Friday, September 24, 2010

கசக்காத பாகற்காய் பொரியல்

பாகற்காய் பொரியல் செய்யும் போது, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டுப் பாருங்கள், சிறிது கூட கசக்காது. கீரையும், பாகையும் சேர்த்து நல்ல மணமாகவும் இருக்கும்.

சாம்பார் பொடி தயாரிக்கும் போது

மழைக்காலத்தில் சாம்பார் பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் உப்புப் போட்டு அரைத்தால், பூசணம் வராது

தயிர் வடை ருசிக்க

தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும் பொழுது மாவின் அளவுக்கு தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் (எந்த வகை பழமாக இருந்தாலும்) போட்டு ஆட்டி, தயிர் வடை செய்து பாருங்கள்.

கீரைப்பச்சடி

முளைக் கீரையை உப்புப் போட்டு வேகவைத்து, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து, 2 கரண்டி புளிக்காத தயிர் விட்டு, கடுகு தாளித்தால் கீரைப் பச்சடி அமிர்தம்

மிளகாய் வறுக்கும்போது

மிளகாய் வற்றல் வறுக்கும்போது அதனுடன் அரை ஸ்பூன் சாதாரண உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

Wednesday, September 22, 2010

அரிசி களைந்தால்....

அரிசி களைந்தால் இரண்டாவதாக கழுவிய நீரை சமையலுக்குப் பயனபடுத்தலாம். இதில் விட்டமின் பி-6, பி--12 இருக்கிறது. புளி ஊற வைக்கலாம், காய்கள் வேகவிடலாம்.

டீ சுவையாக இருக்க

டீ சுவையாக இருக்க எப்போதும் சர்க்கரை சேர்ந்த பாலில் டீ டிகாக்ஷ்னை வடிகட்டுங்கள். அப்போதுதான் டீ நல்ல நிறமாக அமையும், நீர்த்துப் போகாமலும் இருக்கும்.

Wednesday, September 15, 2010

உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க

உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக, சொர, சொரப்பாக இருந்தால், மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள், பாத்திரம் பளிச்சென்று மின்னும்.

மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க

ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.

Tuesday, September 14, 2010

சாம்பார் பொடி டிப்ஸ்

சாம்பார் பொடி அரைக்கும் போது ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டு வராது. ஆனால் சாம்பார் செய்யும்போது உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

முருங்கைக் கீரையை எளிதாக ஆய

முருங்கையை சிறிது சிறிதாக ஒடித்து, பாலித்தின் பையில் போட்டுக் காற்றுப் புகாமல் குக்கர் பாத்திரத்தில் மூடி, காலையில் எடுத்து முறத்திலோ, தாம்பளத்திலோ கொட்டிப்பாருங்கள்.

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்க

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்க, நறுக்கிய ஒரு வெங்காயத்தை அரிவாமனையிலேயே செருகி வைத்து விட்டு பிறகு மற்றவைகளை நறுக்குங்கள். கண்ணில் நீர் வராது.

தேங்காய் சாதம் ருசிக்க

தேங்காய் சாதம் கிளறும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கிளறிப்பாருங்கள். சுவையும், மனமும் ஏ.ஒன். தான்.
^ Scroll to Top