நாம் சமயலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது என்பதை எப்படி அறிவது. மிகச் சுலபம். அதாவது குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்ட எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய் உறையும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலில் அதிக கொழுப்பு சேர்த்து, இரத்த குழாய்களின் வழி அடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் குளிர்காலத்தில் உறையும் தன்மையில்லாத எண்ணெய்களான நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவைகளில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால், உடலில் கொழுப்புச்சத்து சேராது. ஆரோக்கியமானது ஆகும். இப்ப சொல்லுங்க, உங்க வீட்டுல உறையும் எண்ணெய்யா? உறையாத எண்ணெய்யா?
No comments:
Post a Comment