இன்று அதிகபேர் குறிப்பாக பெண்கள் அதிலும் இளம் பெண்கள் அதிகமாக சாம்பு பயன்படுத்துகின்றனர். இங்கே ஒரு ஆலோசனை, சாம்புவில் அதிக methylisothiazoline, or MIT ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, நரம்புகளிடையே நடைபெறும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும். கருவுற்ற தாய்மார்களின் சிசு பாதிக்கப்படும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும், சாம்புவின் பாதிப்புகள் நிறைய. ஆக சாம்புவிற்கு பதில், பைத்தபயர் மாவு, சீயக்காய் பவுடர், அரப்பு பவுடர், அரைத்த செம்பருத்தி இலை, ஆவரம்பு இலைகள் பயன்படுத்தலாம். சரி, சாம்புதான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடித்தால்,ஒன்று செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சாம்புவை தலைக்கு தேய்க்க தேவையான அளவு நீரில் நீங்கள் பயன்படுத்தும் சாம்புவை கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்துங்கள். இதனால் சாம்புவில் உள்ள ரசாயன பொருட்கள் நேரடியாக நம்மை பாதிப்பது தவிர்க்கப்படும். ரசாயன பொருளில் உள்ள பாதிக்கும் தன்மை, நீரில் கலப்பதால் அதன் கெடுக்கும் திறன் குறையும். இப்ப சொல்லுங்க, என்ன செய்யப்போறீங்க.
No comments:
Post a Comment