உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts
Showing posts with label பாட்டி வைத்தியம். Show all posts

Wednesday, October 23, 2013

சீதப்பேதி குணமாக்க..

சீதப்பேதியை குணமாக்க மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து, மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுக்க சீதப்பேதி குணமாகும்.

சுகர் பிரச்சனையா?..

நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை (கருப்பு) சுண்ணாம்புச்சத்து அதிகாமாக இருக்கிறது. இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனுண்டு.

கீரை தரும் பலன்


  • சிறுகீரை: கண் எரிச்சல், இருமல், பித்தம் போக்கும்
  • பசலைக்கீரை: மலக்கட்டு, உடல் வெப்பம் தணிக்கும்
  • பொன்னாங்கண்ணிக்கீரை: உடல் அழகு கூடும்
  • புளிச்சக்கீரை: ரத்தக்குறைபாடுகள் நீக்கும்
  • புதினாகீரை: ஜீரண சக்தி உண்டாகும்
  • தூவளைக்கீரை: காது கேளாமை சரியாகும்

பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாக...


சுக்கு, சீரகம், தணியாவை தலா 25 கிராம் வறுத்து மிக்ஸியில் பொடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு....

  • பெரிய நெல்லிக்காயைத் துருவி காப்பி பொடி போல் பொடி செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
  • நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது
  • கீழாநெல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்
  • செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக் கூடியது. தகுந்த வயது வந்ததும் பூப்பெய்யாத பெண்கள் இப்பூவை உண்டுவர பூப்பெய்யலாம்.
  • வெள்ளைப் பூண்டை தோல்நீக்கி வேகவைத்துச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் சுரக்கும்
  • கடுக்காய், மருதம்பட்டை, ஆவரம்பூ 200 கிராம் எடுத்து பொடிக்கவும். 5கிராம் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வர ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.
  • மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
  • வாழைப்பூவை ரசம் செய்து அருந்தினால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்

Tuesday, October 25, 2011

உடனடி தீபாவளி லேகியம்!

தீபாவளி லேகியம் செய்ய இயலவில்லை என்றால், ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்

Wednesday, September 28, 2011

பல் ஈறுவில் இரத்தம் வருகிறதா? அப்ப இந்த எளிய மருந்து உங்களுக்குத்தான்

பலரது பல்லில் இரத்தம் வருவதுண்டு. பற்பசைகளை மாற்றிப்பார்த்தும் பயன் இருக்காது. அவர்களுக்கு ஒரு இனிய செய்தி
உப்பு, மிளகு, வசம்பு, பெருஞ்சீரகம், பச்சை கற்பூரம், அதிமதுரம் ஆகியவற்றை இடித்து தூளாக்கி வைத்துகொள்ளவும். தினமும் புளோரைடு கொண்ட பற்பசையால் பல் தேய்த்தபின் இடித்த பொடியிலிருந்து சிறிது எடுத்து ஈறில் விரலால் அழுத்தி தேய்க்க வேண்டும். ஈறில் வரும் இரத்த கசிவு அகழும். பற்க்கள் பளபளப்பாக இருக்கும்.

Sunday, July 24, 2011

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியா?

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியால் அதிக தொல்லைக்கு ஆளாவர் பெண்களே அதிகம். அதற்கு எளிய மருந்து. நெருஞ்சி முள்ளை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பருக வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது.  நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

Saturday, July 9, 2011

சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால்

சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. தாய் மட்டுமே அறிவார். அந்த சமய்த்தில் பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கரைத்து குழந்தையின் வயிற்றில் தடவினால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி குணமாக நம்க்கு சந்தோஷம் பிறக்கும்.

சுளுக்கு சரியாக

சுளுக்கு வந்தால் புளியை கரைத்து கொதிக்கவைத்து மஞ்சள் தூள் கலந்து சூடு பொறுக்க சுளுக்கு ஏற்ப்பட்ட இடத்தில் பத்து போட சிறிது நேரத்தில் சுளுக்கு போயே போச்சு.

வயிற்றுவலி உடனே தீர

நமக்கு வயிற்று வலி வந்தால் என்ன செய்வது என்று தோன்றாது. அதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமடையும்.

Monday, January 10, 2011

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.

அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
கடுக்காய் பவுடர்       : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பவுடர்         : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கலா பவுடர்     :  தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. 
சிறுகுறிஞான் பவுடர்:  சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பவுடர்           :  சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பவுடர்     :  நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பவுடர்     :   நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பவுடர்            :   மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பவுடர்       :   இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பவுடர்       :   இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
ஜாதிக்காய் பவுடர்:      நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பவுடர்:           உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பவுடர்:          வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பவுடர்:      மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பவுடர்:        உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பவுடர்:கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
வேப்பிலை பவுடர்:     குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பவுடர்:          வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பவுடர்:      தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பவுடர்:    உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பவுடர்:  அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பவுடர்:     மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பவுடர்:  மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பவுடர்:     சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுட்ர்:     குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பவுடர்: சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பவுடர்:      சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பவுடர்:    பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பவுடர்:               ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பவுடர்:     சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பவுடர்:   நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பவுடர்:        உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பவுடர்:    சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும்.  தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பவுடர்:             பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பவுடர்:        கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பவுடர்:பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Tuesday, December 28, 2010

களைப்பா இருக்கா? அப்ப இதை குடிங்க

புழுங்கலரிசிக் குருணையில் கஞ்சி வைத்து, பூண்டு, வெந்தயம் போட்டு வெந்ததும் மசிய வைத்துக் குடிக்க, களைப்பு நீங்கி சத்து கூடும்.

தொண்டையில் புண்ணா?

மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு, வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும். சளியும் முறியும்.
^ Scroll to Top