உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, December 15, 2010

நடந்த சம்பவம்: படிங்க முதல்ல

பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 4 வயது பெண் குழந்தை கால் முறிவு காரணமாக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அந்தப்பெண் குழந்தைக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்து, உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவியுடன் சிகிச்சையை தொடங்கினர்.  அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் பாதி நேரத்தில் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு தொடர்ந்து துண்டித்து துண்டித்து வரத்தொடங்கி பின்பு அதன் செயல்பாடு நின்று விட்டது.  சிகிச்சையின் பாதியில் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்காத டாக்டர்கள் திகைத்தனர். இதற்கான காரணத்தை அறிந்த டாக்டர் ஆப்ரேசன் தியேட்டர் அருகில் யாரோ செல் போன் பயன்படுத்தியிருப்பதையும் அதனால்தான் உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் செயல்பாடு அடிக்கடி துண்டித்தையும் கண்டுபிடித்தனர்.  யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர், ஆனால் முடியவில்லை. காரணம், எந்தத்தவறும் செய்யாத அந்த பெண் குழந்தை உயிருக்கு சப்போர்ட் தரும் கருவியின் உதவி துண்டித்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. ஆக இதைப் படிப்பவர்கள் தயவுசெய்து உங்கள் செல் போனை இது போன்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து நம்மை அறியாமல் ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருக்க வேண்டாம். இந்தச் செய்தியை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.  உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் கொடுக்காமல் இருப்போமே!

No comments:

Post a Comment

^ Scroll to Top