பெயரை மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ அதற்கான படிவத்தை www.tn.gov.in/stationeryprinting என்ற இனையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி, படிவத்தைப் பூர்த்தி செய்து, கெஜட்டட் அதிகாரியின் கையொப்பம் பெற்று, ரூ. 415க்கு டி.டி. எடுத்து, படிவத்தில் பழைய பெயரில் கையொப்பம் இட்டு, பழைய பெயருக்கான அத்தாட்சியாக, பிறப்புச் சான்று, கல்விச்சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடத்திற்கான சான்று, வாக்காளர் அடையாளச் சான்று, பாஸ்போர்ட் நகல் இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து "உதவி இயக்குனர்(வெளியீடுகள்), எழுது பொருள் அச்சுத்துறை இயக்குனரகம், சென்னை-2" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் அரசிதழின் 5 நகல்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் பத்திரிக்கைகளில் பெயர் மாற்றத்தை தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment