எடை குறைந்து, நமது உயரத்துக்கு ஏற்ற எடை (உயரத்துக்கு ஏற்ற எடை எப்படி அறிவது. மிகச்சுலபம், அதாவது உங்கள் உயரம் 160செ.மீ என்று வைத்துக்கொள்வோம், அப்ப எடை என்பது 160-100=60 அதாவது 60கி.லோ இருக்க வேண்டும்.) இருக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுசத்து மிகக் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருக்க வேண்டும். காரணம், மாவுசத்து உடலில் எடை போடும், புரதசத்து உடலுக்குத் தேவையான சத்துக்களை தரும். அதாவது "எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்."
Tuesday, January 18, 2011
எடை குறைத்து சிக்குன்னு இருக்க
Labels:
உங்கள் கவணத்திற்கு,
உடல் நலன்,
எடை குறைக்க
எந்த எண்ணெய் அதிக கொழுப்பு உள்ளது?
நாம் சமயலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது என்பதை எப்படி அறிவது. மிகச் சுலபம். அதாவது குளிர்காலத்தில் உறையும் தன்மை கொண்ட எண்ணெய்யில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய் உறையும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலில் அதிக கொழுப்பு சேர்த்து, இரத்த குழாய்களின் வழி அடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் குளிர்காலத்தில் உறையும் தன்மையில்லாத எண்ணெய்களான நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவைகளில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால், உடலில் கொழுப்புச்சத்து சேராது. ஆரோக்கியமானது ஆகும். இப்ப சொல்லுங்க, உங்க வீட்டுல உறையும் எண்ணெய்யா? உறையாத எண்ணெய்யா?
Labels:
உங்கள் கவணத்திற்கு,
உடல் நலன்,
கிச்சன் டிப்ஸ்
Tuesday, January 11, 2011
இரண்டு ஊருக்கும் உள்ள தூரம் தெரியனுமா?
இரண்டு சிட்டிக்கும் உள்ள தூரம் தெரியனுமா? அப்ப இந்த இனையதளத்திற்கு போங்க. http://www.mapcrow.info/
Labels:
இலவச மென்பொருட்கள்,
உங்கள் கவணத்திற்கு
உங்கள் கேள்விக்கு என்ன பதில்?
உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு சரியான பதில் வேண்டுமா, அப்ப இந்த இனையதளத்திற்கு போங்க.http://www.straightdope.com
Labels:
உங்கள் கவணத்திற்கு
Monday, January 10, 2011
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.
அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
ஜாதிக்காய் பவுடர்: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பவுடர்: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பவுடர்:கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
வேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பவுடர்: சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பவுடர்:பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

அழகுக் குறிப்புகள்,
உடல் நலன்,
பாட்டி வைத்தியம்
Friday, January 7, 2011
குளிக்க சாம்போடு கிளம்பிட்டீங்களா? ஒரு நிமிடம்
இன்று அதிகபேர் குறிப்பாக பெண்கள் அதிலும் இளம் பெண்கள் அதிகமாக சாம்பு பயன்படுத்துகின்றனர். இங்கே ஒரு ஆலோசனை, சாம்புவில் அதிக methylisothiazoline, or MIT ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, நரம்புகளிடையே நடைபெறும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும். கருவுற்ற தாய்மார்களின் சிசு பாதிக்கப்படும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும், சாம்புவின் பாதிப்புகள் நிறைய. ஆக சாம்புவிற்கு பதில், பைத்தபயர் மாவு, சீயக்காய் பவுடர், அரப்பு பவுடர், அரைத்த செம்பருத்தி இலை, ஆவரம்பு இலைகள் பயன்படுத்தலாம். சரி, சாம்புதான் பயன்படுத்துவேன் என்று அடம்பிடித்தால்,ஒன்று செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சாம்புவை தலைக்கு தேய்க்க தேவையான அளவு நீரில் நீங்கள் பயன்படுத்தும் சாம்புவை கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்துங்கள். இதனால் சாம்புவில் உள்ள ரசாயன பொருட்கள் நேரடியாக நம்மை பாதிப்பது தவிர்க்கப்படும். ரசாயன பொருளில் உள்ள பாதிக்கும் தன்மை, நீரில் கலப்பதால் அதன் கெடுக்கும் திறன் குறையும். இப்ப சொல்லுங்க, என்ன செய்யப்போறீங்க.
Labels:
உங்கள் கவணத்திற்கு
Wednesday, January 5, 2011
இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களையும் பார்க்கனுமா?
இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களையும் 360டிகிரி அளவில் பார்த்து பரவசம் அடைய இந்தத் தளத்திற்கு போங்க,http://www.view360.in/ போயிட்டு என்னுடைய வலைப்பூவிற்க்கு வந்துரனும் சரியா?
Labels:
உங்கள் கவணத்திற்கு
ஆலிவ் ஆயில் அற்புதங்கள்
கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. "மோனோ சாச்சுரேடட்" கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரால் போன்றவை கெட்டது. ஆலிவ் எண்ணெய் இந்த நல்ல கொழுப்பை நமக்கு அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து பயன் படுத்த, நமது இளமை நீட்டிக்கப்படும். அது மட்டுமல்ல......
- கேன்சர், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
- ஆலிவ் ஆயில் அல்சர், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். மூளை, எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும்.
- ஆலிவ் ஆயில் வைட்டமின் ஏ.சி, ஈ போலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும், கூந்தல் மிளிரும்
- சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது
- ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டுக் கலக்கி, தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்புக்கள் தீரும்.
- ஆலிவ் எண்ணெயில் கருஞ் சீரகத்தைப் பொடி செய்து போட்டு, அதை முகம் முழுவதும் தடவி,பத்து நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், முகம் அழகு பெறும்.
- ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்ணின் கீழ் பூசி வர கருவளையம் மறையும்.
- தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஞ் செய்து, ஊறிய பின் குளித்தாள், முடி உதிர்வது நிற்கும்.
- கைகள் சொரசொரப்பாக, பார்ப்பதற்கு அழகற்றுக் காணப்படுகின்றதா? ஆலிவ் எண்ணெய்யுடன், சிறிது பொடி உப்பைக் கலந்து கைகளில் நன்கு தேய்த்தால், கைகள் மென்மை பெறும்.
Labels:
அழகுக் குறிப்புகள்,
உங்கள் கவணத்திற்கு,
உடல் நலன்
Subscribe to:
Posts (Atom)