உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, December 29, 2010

நிலம் வாங்கப் போறிங்களா? இத படிச்சிட்டுப் போங்க

நிலம் வாங்குவதற்கு முன் கவணிக்க வேண்டியவை


  •  24 அடிக்கும் குறைவான அளவுள்ள சாலையில் மனை வாங்காதீர்கள்
  •  600, 800 ச.அடி அளவு நிலம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
  •  வாங்கும் நிலம் அரசுக்குச் சொந்தமானதா என்பதை (ஸீலிங்)சம்பந்தபட்ட தாலுகா அலுவகத்தில் "செக்" செய்யுங்கள்.
  • முடிந்தவரை "அன் அப்ரூவ்டு" மனைகள் வேண்டாம்.
  • "பவர் ஆப் அட்டானி" நிலத்தை வாங்கும்போது கவனம் தேவை.
  • பத்திரப் பதிவின் போது பிரதிநிதியை அனுப்பாமல் நீங்களே நேரடியாகச் செல்லுங்கள்.
  • பத்திரப்பதிவின் முந்தைய நாள் வரை "வில்லங்கச் சான்றிதழ்" கேட்டு வாங்குங்கள்.
  • நிலம் முறையாக "லேஅவுட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை "சர்வேயர்" கொண்டு அளந்து பார்ப்பது நல்லது.

Tuesday, December 28, 2010

களைப்பா இருக்கா? அப்ப இதை குடிங்க

புழுங்கலரிசிக் குருணையில் கஞ்சி வைத்து, பூண்டு, வெந்தயம் போட்டு வெந்ததும் மசிய வைத்துக் குடிக்க, களைப்பு நீங்கி சத்து கூடும்.

தொண்டையில் புண்ணா?

மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு, வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும். சளியும் முறியும்.

பாதாம், கடலை, பிஸ்தா பற்றிய தகவல்

கொழுப்பு அதிகம் உள்ளது என்று பயந்து ஒதுக்கும் பாதாம், கடலை, பிஸ்தா போன்றவற்றை ஒதுக்க வேண்டாம்.  காரணம், அவற்றில் உள்ள பாலிக் ஆஸிட் இதயத் துடிப்பைச் சீராக்கி நலம் விளைவிக்கும்.

கையில் பவள மோதிரமா?

உயர்தர பவள மோதிரம் போட்டுக் கொண்டு புளியைக் கரைக்கக் கூடாது. நவமணிகள் கரைந்துவிடும்.

உங்களது மேனி வசீகரமாகனுமா?

தேவையானவை: சந்தனத்தூள்-50 கிராம், ரோஸ் வாட்டர்-50 மில்லி, பாதாம் ஆயில், எலுமிச்சைச்சாறு- சில துளிகள். இப்ப எப்படி செய்வதுன்னு பார்ப்போம். 2 டீஸ்பூன் சந்தனத்தூளில், பத்து சொட்டு ரோஸ் வாட்டர், ஐந்து சொட்டு பாதாம் ஆயில், ஐந்து சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கலந்து கறுத்துப்போன பாகங்களில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்துவர உங்களது மேனி வசீகரமாக மாறும்.

குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்

சூடான நீரில் சில துளி எலுமிச்சை சாறுவிட்டு 2 நிமிடம் ஆவி பிடிக்க முகத்தில் உள்ள அழுக்கெல்லாம் வெளியேறி சருமம் பளிச் என இருக்கும். அதன் பின் பன்னீர் தொட்டு முகத்தைத் துடையுங்கள். அப்புறம் பாருங்க, எத்தனை பேர் உங்க பின்னால் வர்றாங்கனு.
^ Scroll to Top