உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, October 23, 2013

பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாக...


சுக்கு, சீரகம், தணியாவை தலா 25 கிராம் வறுத்து மிக்ஸியில் பொடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு....

  • பெரிய நெல்லிக்காயைத் துருவி காப்பி பொடி போல் பொடி செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
  • நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது
  • கீழாநெல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்
  • செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக் கூடியது. தகுந்த வயது வந்ததும் பூப்பெய்யாத பெண்கள் இப்பூவை உண்டுவர பூப்பெய்யலாம்.
  • வெள்ளைப் பூண்டை தோல்நீக்கி வேகவைத்துச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் சுரக்கும்
  • கடுக்காய், மருதம்பட்டை, ஆவரம்பூ 200 கிராம் எடுத்து பொடிக்கவும். 5கிராம் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வர ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.
  • மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
  • வாழைப்பூவை ரசம் செய்து அருந்தினால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்

Friday, March 15, 2013

கோபம் படுகிறவறா நீங்கள்?

நாம அனைவரும் கோபப்படுபவர்கள்தான்.  கோபப்படுவதன் அளவுதான் மாறுபடுவதன் மூலம் நாம் மாறுபடுகிறோம். ஆனா கோபபடுவர்கள் இந்த ஆடியோவை கேளுங்கள். அப்புறம் முடிவு செய்யுங்கள். கோபப்படுவதா இல்லையா என்று.. கோபம் என்னை சொடுக்குங்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற....

வாழ்க்கையில் நாம் வெற்றி பெற விரும்புகிறவர்கள் கேட்கவேண்டிய ஒரு ஒலிநாடா இது. கேட்க விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும்

Monday, January 14, 2013

வாசகர்களுக்கு இனிய பொங்கள் தின வாழ்த்துக்கள்


^ Scroll to Top