உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, October 23, 2013

சூட்டினால் வயிற்று வலியா..?


ஒருபிடி வெந்தயத்தை நன்றாக கருக வறுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடி செய்யவும். இதை சூடான சாதத்தில் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி பிசைந்து, நான்கு கவளம் சாப்பிட்டால் அரைமணி நேரத்தில் வயிற்று வலி பறந்து போடும்.

சீதப்பேதி குணமாக்க..

சீதப்பேதியை குணமாக்க மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து, மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுக்க சீதப்பேதி குணமாகும்.

சுகர் பிரச்சனையா?..

நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை (கருப்பு) சுண்ணாம்புச்சத்து அதிகாமாக இருக்கிறது. இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனுண்டு.

கீரை தரும் பலன்


  • சிறுகீரை: கண் எரிச்சல், இருமல், பித்தம் போக்கும்
  • பசலைக்கீரை: மலக்கட்டு, உடல் வெப்பம் தணிக்கும்
  • பொன்னாங்கண்ணிக்கீரை: உடல் அழகு கூடும்
  • புளிச்சக்கீரை: ரத்தக்குறைபாடுகள் நீக்கும்
  • புதினாகீரை: ஜீரண சக்தி உண்டாகும்
  • தூவளைக்கீரை: காது கேளாமை சரியாகும்

பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாக...


சுக்கு, சீரகம், தணியாவை தலா 25 கிராம் வறுத்து மிக்ஸியில் பொடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு....

  • பெரிய நெல்லிக்காயைத் துருவி காப்பி பொடி போல் பொடி செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
  • நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது
  • கீழாநெல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்
  • செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக் கூடியது. தகுந்த வயது வந்ததும் பூப்பெய்யாத பெண்கள் இப்பூவை உண்டுவர பூப்பெய்யலாம்.
  • வெள்ளைப் பூண்டை தோல்நீக்கி வேகவைத்துச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் சுரக்கும்
  • கடுக்காய், மருதம்பட்டை, ஆவரம்பூ 200 கிராம் எடுத்து பொடிக்கவும். 5கிராம் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வர ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.
  • மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
  • வாழைப்பூவை ரசம் செய்து அருந்தினால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்
^ Scroll to Top