உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, February 1, 2011

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவணத்திற்கு

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்ளுவதும் ஆகும். இந்த உப்பு நமது உடலில் உள்ள இரத்தத்தில் சேர்ந்து இரத்ததின் வேகத்தை அதிகரிக்கிறது. இதுவே இரத்த அழுத்தமாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்குவது, உணவில் உப்பை குறைப்பதுதான். இன்னும் சொல்லப்போனால், உப்பில்லாத உணவு வழங்குவதும் உண்டு.  ஆக இரத்த அழுத்தம் வராமல் இருப்பதற்கும், வந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் ஒரு சிறந்த வழி சொல்கிறேன்.  பொதுவாக, நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இதுவே ஆபத்து. இதற்குப்பதிலாக நாட்டுமருந்து கடைகளில் இந்துப்பு அல்லது இந்து உப்பு அல்லது டைமன் உப்பு என்று கேட்டு வாங்குகள். இது வடிவத்தில் கற்கண்டு கட்டி போல் இருக்கும். தூளாகவும் கிடைக்கும். விலை கிலோ சுமார் ரூ. 40/-  இருக்கும். இந்த உப்பு மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இது நாம் பயன் படுத்தும் உப்பு போலவே இருக்கும். சுவை மாறாது. உடலுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. உப்பை குறைக்க வேண்டியதில்லை. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதிக இரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் உடனே மாற்றுங்கள் உப்பை.

No comments:

Post a Comment

^ Scroll to Top