நாம் கம்யூட்டரில் தெரியாமல், ஃபைலை அழித்துவிடுவோம். அதை எப்படி மீட்பது.அதற்கு எழிய வழி இந்த வலைதளத்திற்குச் சென்று ரெக்குவா என்ற மென்பொருளை பதவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செயல்படுத்தினால் அழித்த அனைத்து ஃபைலையும் பெறலாம். அதற்க்கு செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.piriform.com/recuva
Sunday, July 24, 2011
அழித்த ஃபைலை மீண்டும் பெற
Labels:
இலவச மென்பொருட்கள்
யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியா?
யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியால் அதிக தொல்லைக்கு ஆளாவர் பெண்களே அதிகம். அதற்கு எளிய மருந்து. நெருஞ்சி முள்ளை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பருக வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
Labels:
உடல் நலன்,
சித்த மருத்துவம்,
பாட்டி வைத்தியம்
நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.
Labels:
உடல் நலன்,
சித்த மருத்துவம்,
பாட்டி வைத்தியம்
நல்ல டாக்டர்கள் "இருவர்"
நல்ல வாழ்வு வாழ நாட வேண்டிய இயற்கை டாக்டர்கள் இருவர்
அவர்களில் ஒருவர். இவரிடம் காலையில் எழுந்து உடலை காட்டுவதுதான். நமது உடலை இவர் "செக்கப்" செய்து கொள்ள காசு வாங்க மாட்டார். அவர் "சூரியன்" ஆவார்.
சூரியன் என்ற டாக்டர் தரும் பயன்கள்
* சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார் என்பது பழமொழி
* சூரிய ஒளி சருமத்திற்கு பொழிவு தருகிறது.
* உடலில் நோய் எதிர்ப்பு தரும் வெள்ளை அனுக்களை அதிகரிக்கச் செய்கிறது
* சூரிய ஒளி உணவு செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது. கழிவுகளை வெளியேற்றுவதற்க்கு உதவும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துனை புரிகிறது.
*உடல் ஊட்டச்சத்திற்குத் தேவையான வைட்டமின் "டி" சூரிய ஒளி தருகிறது.
* மாலை வெயிலில் நடைப்யணம் மேற்கொண்டால் ஆண்மை விருத்தி ஏற்படும்
* காலை, மாலை சூரிய ஒளி நமது உடலில் பட்டால், புற ஊதாக்கதிர்கள் படும். அது வைரஸ்,பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் உச்சி வெயில் வேண்டாம்.
*சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது
அடுத்த டாக்டர்: இவர் கசப்பில்லாத மருந்து தருவார். எனவே அனைவரும் இவரை விரும்புவர். மற்ற மருந்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று டோஸ் என்றால், இவர் தரும் மருந்து ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டோஸ். அவர்தான் "தண்ணீர்".
*சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்திற்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உடலுக்குத்தேவையான எலக்ரோலைட்டை உடல் பெற ஏதுவாக இருக்கும். இல்லாவிட்டால் உடலில் உள்ள செல்கள் வறண்டு விடும் அல்லது இறந்து விடும்.
* உடலில் கெட்ட கொழுப்பு ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது,
*வாத நோய் வருவதை தண்ணீர் தடுக்கிறது,
*இதயம், மூளைக்கு செல்லும் தமனிகள் தடையின்றி செல்ல உதவுகிறது
*நமது மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதால் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது
அப்ப இந்த இரண்டு டாக்டர்களையும் தினமும் பாருங்க, அவர்கள் உங்க ஆரோக்கியத்தின் நண்பர்கள் ஆவர்.
Labels:
உடல் நலன்
Saturday, July 23, 2011
திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம்.....
Labels:
உங்கள் கவணத்திற்கு
Saturday, July 9, 2011
சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால்
சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. தாய் மட்டுமே அறிவார். அந்த சமய்த்தில் பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கரைத்து குழந்தையின் வயிற்றில் தடவினால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி குணமாக நம்க்கு சந்தோஷம் பிறக்கும்.
Labels:
குழந்தை மருத்துவம்,
பாட்டி வைத்தியம்
சுளுக்கு சரியாக
சுளுக்கு வந்தால் புளியை கரைத்து கொதிக்கவைத்து மஞ்சள் தூள் கலந்து சூடு பொறுக்க சுளுக்கு ஏற்ப்பட்ட இடத்தில் பத்து போட சிறிது நேரத்தில் சுளுக்கு போயே போச்சு.
Labels:
பாட்டி வைத்தியம்
வயிற்றுவலி உடனே தீர
நமக்கு வயிற்று வலி வந்தால் என்ன செய்வது என்று தோன்றாது. அதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமடையும்.
Labels:
உடல் நலன்,
பாட்டி வைத்தியம்
Subscribe to:
Posts (Atom)