உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, January 5, 2011

ஆலிவ் ஆயில் அற்புதங்கள்

கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. "மோனோ சாச்சுரேடட்" கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரால் போன்றவை கெட்டது.  ஆலிவ் எண்ணெய் இந்த நல்ல கொழுப்பை நமக்கு அளிக்கிறது.  கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து பயன் படுத்த, நமது இளமை நீட்டிக்கப்படும். அது மட்டுமல்ல......

  1.  கேன்சர், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
  2.  ஆலிவ் ஆயில் அல்சர், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். மூளை, எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும்.
  3. ஆலிவ் ஆயில் வைட்டமின் ஏ.சி, ஈ போலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும், கூந்தல் மிளிரும்
  4. சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது
  5. ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டுக் கலக்கி, தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்புக்கள் தீரும்.
  6. ஆலிவ் எண்ணெயில் கருஞ் சீரகத்தைப் பொடி செய்து போட்டு, அதை முகம் முழுவதும் தடவி,பத்து நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், முகம் அழகு பெறும்.
  7. ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்ணின் கீழ் பூசி வர கருவளையம் மறையும்.
  8. தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஞ் செய்து, ஊறிய பின் குளித்தாள், முடி உதிர்வது நிற்கும்.
  9. கைகள் சொரசொரப்பாக, பார்ப்பதற்கு அழகற்றுக் காணப்படுகின்றதா? ஆலிவ் எண்ணெய்யுடன், சிறிது பொடி உப்பைக் கலந்து கைகளில் நன்கு தேய்த்தால், கைகள் மென்மை பெறும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top