உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, March 13, 2012

நீங்க வாங்கின சொத்துக்களை பத்திரப்பதிவு மட்டும் செல்லாது….

index
நம்மில் பலரும் சொத்துக்கள் வாங்கின பின்பு அந்த சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தபின்பு, நாம் வாங்கின சொத்துக்கள் பத்திரமாக இருக்கின்றது என்று எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் இனி பத்திரப்பதிவு மட்டும் செல்லாது.
அதாவது சொத்துக்கள் வாங்குவதில் பத்திரப்பதிவு என்பது முதல் படி, அந்த சொத்துக்களை வருவாய்த்துறையில் பதிவு செய்து பட்டா வாங்கினால்தான் அது முழுமையாக நமக்குச் சொந்தமாகும். இதற்கு என்ன வழி
கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
மனுதாரன், தனது மனுவுடன், ஆவணங்களின் நகல்களை அளித்தால் போதும். எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை(ஆனால் லஞ்சம் உண்டு) .  மூல ஆவணங்களை கொடுக்கத்தேவையில்லை.
கிராம நிர்வாக அலுவலர் மற்ற கிராமத்திற்க்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் மனுக்களை பெறுவார்.
இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ சென்று சம்பந்தப்பட்ட மண்டல துனை தாசில்தாரிடம் ஒப்படைப்பார்.
ஒப்புகைச்சீட்டில் மறுபாதியில் துணை தாசில்தார் கையெப்பம் இட வேண்டும். இந்த ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து 2 வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும்.
என்ன ஏதாவது புரிகின்றதா?!

Monday, March 12, 2012

ஆங்கிலக் குழப்பம் நீக்கும் தளம்

நம்மில் சிலருக்கு ஆங்கிலத்தில் சில குழப்பம் இருக்கும் அதாவது affect/effect, practice/practise, warrenty/guarantee போன்ற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரியாமல் இருக்கும். இந்த சந்தேகத்தை நீக்க வேண்டுமா? அதற்க்கு சரியான தளம் செல்ல இங்கே சொடுக்கவும்.

யுக தர்மம் அப்படினா என்ன?!


யுகம் நான்கு வகைப்படும். அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். கிருத யுகத்தில், தானே சென்று ஒருவருக்கு தேவையானதை கொடுப்பர், கூப்பிட்டுக் கொடுத்தால் அது திரேதா யுகம், வந்து கேட்டால்தான் கொடுப்பது  துவாபர யுகம். ஆனால் கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கிடைப்பது கலியுகத்தில்.  இப்ப தெரியுதா, நாம எந்த யுகத்தில் வாழ்கின்றோம் என்று.
^ Scroll to Top